பொருளாதார மத்திய நிலையங்களுக்கான விசேட வழிகாட்டல்கள்
COVID-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாட்டிலுள்ள 16 பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- COVID-19 தொற்று ஒழிப்பிற்கு தேவையான திட்டங்களை அந்தந்த பொருளாதார மத்திய நிலையங்கள் தயார் செய்துகொள்ள வேண்டும். அந்த திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கண்காணிக்க உத்தியோகத்தர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்
- அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் தூய்மையாக பேணுதல் அவசியம்
- பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வோருக்கு வெற்றிலை உண்பதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதுடன், வளாகத்திற்குள் எச்சில் துப்பவும் தடை விதிக்கப்பட வேண்டும்
- சமூக இடைவௌியை பேணுவதை அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் உறுதிப்படுத்தல் வேண்டும்
- கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருவோருக்கு எழுமாறாக PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்
- கைகளைக் கழுவ தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
விஜய் மீண்டும் நடிக்க வந்துவிடுவார், அதுவும் என் படத்திலேயே...
02 January 2026
அவர் காதலை சொன்னார், நானும் ஓகே சொல்லிட்டேன் - அனுஷ்கா
02 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025