தனிமைப்படுத்தல் சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

தனிமைப்படுத்தல் சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

மேல்மாகாணத்தில் உள்ள 110 காவல்துறை பிரிவுகளை உள்ளடக்கியதாக தனிமைப்படுத்தல் சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமாக அதிபர் தேசபந்து தென்னகோனில் அறிவுறுத்தலின் பேரில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொது இடங்களில் குறித்த பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது முகக்கவசங்கள் அணியாமல் இருந்து 5,620 பேருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.