
போரிஸ் ஜோன்சனின் இந்திய சுற்றுப் பயணம் சாத்தியமில்லை!
புதிய கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணம் சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர்போரிஸ் ஜோன்சன் கலந்து கொள்கிறார். தற்போது இங்கிலாந்து உருமாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவரது இந்திய பயணத்திற்கு சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து மருத்துவ சங்க கவுன்சிலின் தலைவர் சாந்த் நாக்பால் வழங்கிய செவ்வியில் ”இங்கிலாந்து அரசு முன்னதாக போரிஸ் ஜோன்சன் இந்தியா செல்வார் என்பது, தற்போது சாத்தியம் இல்லாமல் போகலாம்.
தற்போது இருந்து ஐந்து வாரங்கள் இருப்பதால் இன்று முடிவு எடுக்க முடியாது. நாளுக்கு நாள் அடிப்படையில் வைரஸ் உருமாற்றம் நடைபெற்று வருகிறது. இப்படியே தொடர்ந்தால் இந்தியா சுற்றுப் பயணம் சாத்தியமில்லை.
ஆனால் லண்டன் மற்றும் பிற பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முடியும். அதன்பின் வாய்ப்பு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.