சுஷாந்த் தற்கொலைக்கு சி.பி.ஐ விசாரணை: வலுக்கும் கோரிக்கை

சுஷாந்த் தற்கொலைக்கு சி.பி.ஐ விசாரணை: வலுக்கும் கோரிக்கை

வேகமாக வளர்ந்து வந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனி என்ற ஒரே படத்தின் மூலம் உயரத்துக்கு சென்றார். பலம் வாய்நத நடிகர்களால் தொல்லை, காதல் தோல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தற்போது சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல்கட்சி பிரமுகர்கள், திரையுலக முன்னணியினர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கும் இதுகுறித்து பலரும் கடிதம் எழுதி வருகிறார்கள். முன்னதாக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆளுநருமான நிகில் குமார், பாஜக தலைவரும், நடிகருமான மனோஜ் திவாரி ஆகியோரும் சுஷாந்த் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக நடிகர் சல்மான்கான், இயக்குனர் கரண் ஜோஹர், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபர்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.