இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை எடுத்துறைத்த தினேஷ் குணவர்தன..!
இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்துள்ளார்.
எஸ்தோனியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன இணைந்து அண்மையில் நடத்திய மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு - 2020 இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரஜைகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் ஆட்சியின் மையமான வாழ்க்கை வரலாற்று மற்றும் சுயவிபரத் தரவு தொடர்பான தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு, நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, மோட்டார் போக்குவரத்து, வருமான வரி மற்றும் உள்ளூராட்சித் துறைகளில் இலத்திரணியல் ஆட்சி உட்பட்ட சேவைகள் காணப்படும்.
சைபர் தாக்குதல்கள், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் இதுபோன்ற தீங்கிழைக்கும் செயல்களுக்கு வழிவகுப்பதால், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவருடன் கலந்தாலோசித்து, கட்டாய சைபர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சைபர் பாதுகாப்புக்கான இலங்கை மையம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குனவர்தன தெரிவித்துள்ளார்.