தெரிஞ்சிக்கங்க…பச்சை வாழைப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

தெரிஞ்சிக்கங்க…பச்சை வாழைப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

பச்சை வாழைப்பழம் என்பது வாழை பழத்திற்கு முந்தைய பருவம் ஆகும். பழுக்காத வாழைப் பழம் வாழைக் காயாகும். இதனை உண்ண சிறந்த வழி, சமைத்து உண்ணுவது, வேக வைத்து உண்ணுவது மற்றும் பொறித்து உண்ணுவது போன்றவையாகும். பச்சை பச்சை வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவற்றின் ஆதாரமாக விளங்குகிறது. இதில் இருக்கும் மாவுச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

வயிற்று போக்கு இருக்கும்போது இந்த காயை பொதுவாக உண்ணலாம். கொழுப்பு அமிலம் மற்றும் மாவுச்சத்து போன்றவை பச்சை வாழைபழத்தில் அதிகம் உள்ளது. மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் , மஞ்சள் வாழைப் பழத்தில் உள்ள அளவே உள்ளன. பச்சை வாழைப்பழத்தில் சோடியம், பொட்டஷியம் , நார்ச்சத்து மேலும் குறைந்த அளவு புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால் பச்சை வாழைப்பழத்தை பலரும் உன்ன மறுக்கின்றனர். இதில் உள்ள ஆரோக்கிய பலங்கள படித்து உணர்ந்து இனி அனைவரும் இந்த பச்சை வாழைப்பழத்தை தங்கள் உணவில் இணைந்துக் கொள்வோம்.