குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்புகள்...!

குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்புகள்...!

நாட்டில் மீண்டும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டிருந்தமையினால் வாகன விபத்துக்கள் குறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தற்போது வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களால் 10 பேர் உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.