மஹர சிறைச்சாலை மரணச்சம்பவ வழக்கு ஒத்திவைப்பு..!

மஹர சிறைச்சாலை மரணச்சம்பவ வழக்கு ஒத்திவைப்பு..!

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் மரணித்தி 7 கைதிகளின் சரீரங்களின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறாமையினால் அவை தொடர்பான வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

வத்தளை நீதவான் புத்திக சிறி ராகலவின் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதற்கு முன்னர் நான்கு கைதிகளின் சரீரங்களில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அவர்களின் உடல்களில் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டதாக குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த நான்கு சரீரங்களையும் தகனம் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.