மீண்டும் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்! திகதி அறிவிப்பு?

மீண்டும் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்! திகதி அறிவிப்பு?

தற்போதைய சூழ்நிலையில், 2020, டிசம்பர் 26 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா பரவுவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதல்களுக்கு இணங்க சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது எப்போது என்று செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கொரோனா தொற்றுநோய் தாக்கம் என்பவற்றால் சுற்றுலாத்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

எனவே இப்போது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.