நாட்டின் நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்தம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் நாட்டின் நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு துறைமுகத்தின் 23 தொழிற்சங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இதற்கமைய நேற்று கொழும்பு துறைமுகத்தின் மூன்றாம் நுழைவாயில் முன்னால் குறித்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மௌனப்போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.