
கண்டி மக்களுக்கு அதிர்ச்சி – ஆய்வில் வெளிவந்த தகவல்
கண்டி திகன பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் இன்று பகல் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் கண்டி திகன பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் செறிந்துவாழும் அம்பாக்கோட்டை பிரதேசத்திற்கு விரைந்தனர்.
குறித்த பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் இதுவரை 7 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஆய்வுசெய்வதற்காக மேற்படி குழு இன்று விஜயம் செய்தது.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஒருசில வீடுகள் அருகே நிலநடுக்கத்தை உணர்கின்ற கருவிகளை வைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு செய்யப்படும் இடத்தில் வெடிப்புக்களை நிகழ்த்தி அதனை பதிவு செய்துள்ளனர்.
எனினும் நிலநடுக்கத்தின் போது சந்தேகிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்வு வெடிப்பு இன்று இயந்திரத்தில் பதிவாகவில்லை.
இதன் காரணமாக அண்மைய நாட்களாக ஏற்பட்ட நிலநடுக்கமானது சுண்ணாம்புக்கல் அகழ்வினால் ஏற்பட்டதல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் இதைதெரிவித்தார்.
இதையடுத்து குறித்த நிலநடுக்கத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவராத நிலையில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.