நேற்றிரவு இடம்பெற்ற அனர்த்தம்! வைத்தியர் ஒருவர் வைத்தியசாலையில்...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஜீப் வண்டி ஒன்று நேற்று (16) இரவு 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகனத்தை ஓட்டிச்சென்ற வைத்தியர் காயங்களுக்கு உள்ளான நிலையில், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.