47,430 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

47,430 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்டிருந்த 47,430 வாக்காளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 7 லட்சத்து 53 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேருக்கு மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்கும் தகுதி கிடைத்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் அதிகளவானவை தேர்தல் நடத்தப்படும் போது வாக்குச் சாவடிகளில் கடமையாற்றும் அரச அதிகாரிகளின் விண்ணப்பங்கள் அல்ல என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது.