தொடரும் துயரம் அடுத்தடுத்து உயிரிழக்கும் சிறுத்தையினம்!!

தொடரும் துயரம் அடுத்தடுத்து உயிரிழக்கும் சிறுத்தையினம்!!

புஸ்ஸல்லாவை ஹெல்பொட தோட்டத்தில் பொறிக்குள் சிக்கிய நிலையில் 2 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்துள்ள சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு உரித்தான அரியவகையான சிறுத்தை, புலி இனங்கள் மலையகத்தில் அதிகம் வாழ்கின்றன என்பது அண்மையில் கண்டறியப்பட்டது.

எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் 5 இற்கும் மேற்பட்ட சிறுத்தை இனங்கள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.