தேர்தல் கடமைகளிலிருந்து திடீர் விலகலை அறிவித்துள்ள சங்கம்!

தேர்தல் கடமைகளிலிருந்து திடீர் விலகலை அறிவித்துள்ள சங்கம்!

கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட அனைத்து தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் இருந்தும் எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் விலகிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 29ஆம் திகதியில் இருந்து தேர்தல் கடமைகளில் இருந்தும் தாம் இடைவிலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது பொது சுகாதார ஆய்வாளர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளை பொது சுகாதார அமைச்சு கவனத்திற் கொள்ளவில்லை என தெரிவித்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.