பொதுஜன பெரமுன வேட்பாளரின் வீட்டிலிருந்து காவலாளியின் சடலம் மீட்பு

பொதுஜன பெரமுன வேட்பாளரின் வீட்டிலிருந்து காவலாளியின் சடலம் மீட்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீடொன்றில் காவலாளி மற்றும் நாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்ல தலங்கம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்தே இவ்வாறு இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

தலங்கம பொலிஸாரிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று காலை குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது காவலாளி மற்றும் நாயின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவலாளி உயிரிழந்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவ காவலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.