டோனி ஆதரவு இல்லையென்றால் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை 2014-ல் முடிந்து இருக்கும்: கவுதம் கம்பிர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பிர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணுடன் உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் எங்களுக்கு மோசமாக இருந்தது. அந்த தொடரில் நானும் விளையாடினேன்.
அந்தத் தொடரில் டோனிக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்.
ஏனென்றால் நிறைய பேருடைய கிரிக்கெட் வாழக்கை முடிவுக்கு வந்து இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் டோனிதான் வீராட் கோலியை மிகவும் ஆதரித்தார். இல்லையென்றால் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை அந்தத் தொடரோடு முடிந்து இருக்கும்.
இவ்வாறு காம்பீர் கூறினார்
வி.வி.எஸ். லட்சுமண் கூறியதாவது:-
அந்தத் தொடரில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனால் அடுத்த முறை இங்கிலாந்து சென்றபோது பர்மிங்காமில் முதல் இன்னிங்சில் அடித்த சதம் மறக்க முடியாதது. கோலியின் இன்னிங்ஸ்களில் எனக்குப் பிடித்த இன்னிங்ஸ் இதுவாகும். இந்த ஆட்டம் மூலம்தான் உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக கோலி உருவானார்.
இவ்வாறு அவர் கூறினார்.
2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்.