இன்றைய ராசி பலன்கள்14/12/2020

இன்றைய ராசி பலன்கள்14/12/2020

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூட பிரச்சினையாக மாறும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே வெற்றி பெறும் நாள் .


ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.


மிதுனம்

மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராததனலாபம் உண்டு. உத்தியோகத்தில்  உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.


கடகம்

கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில்  புது பொறுப்புகள் தேடிவரும். புதுமை படைக்கும் நாள்.


சிம்மம்

சிம்மம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.


துலாம்

துலாம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்தபொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க பாருங்கள். சொந்த பந்தங்கள் அன்புத் தொல்லைகள் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில்  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


தனுசு

தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்புகிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


கும்பம்

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில்  உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


மீனம்

மீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள் அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.