பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு மேலும் பின்னடைவு

டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்த லில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி டிரம்ப் தனது தோல் வியை ஏற்க மறுத்து வருகிறார். மேலும் பல்வேறு மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாநில தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருக்கிறது.

தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதரங்கள் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.