பயிற்சியாளர் பதவியை இழந்தார் ஹர்ஷல் கிப்ஸ்!

பயிற்சியாளர் பதவியை இழந்தார் ஹர்ஷல் கிப்ஸ்!

கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வந்த முன்னாள் தென் ஆபிாிக்க அணி கிாிக்கட் வீரரான ஹர்ஷல் கிப்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொிய வந்துள்ளது.

கொழும்பு கிங்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல வெளிநாட்டு வீரர் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கான காரணமென தொிவிக்கப்படுகிறது.

ஹர்ஷல் கிப்ஸ் இம்முறை லங்கா பிறீமியர் லீக் போட்டித் தொடாின் வர்ணனையாளராகக் கடமையாற்றுவதற்கென வருகை தந்த போதிலும் பின்பு அவர் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்

இதன் காரணமாக குறித்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளராகக் கடமையாற்றி வந்த ரங்கன ஹேரத் அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் கடமையாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.