வடக்கின் கொரோனா வைத்தியசாலையில் 20 நோயாளர்கள் குணமடைவு

வடக்கின் கொரோனா வைத்தியசாலையில் 20 நோயாளர்கள் குணமடைவு

வடமாகாண கொரோனா தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டமையடுத்து, சுமார் 100 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்றினால் சிகிச்சைக்காக வந்தவர்களில் இன்று(10) 20 பேர் தங்களின் சிகிச்சையை நிறைவுசெய்து இறுதியாக எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் தங்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.