800 ஆண்டுகளின் பின் தோன்றும் நத்தார் நட்சத்திரம்

800 ஆண்டுகளின் பின் தோன்றும் நத்தார் நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் அதன் ஒழுக்கில் ஒன்றன் மீது ஒன்றாகத் தோன்றும் காட்சியானது நத்தார் நட்சத்திரமென வர்ணிக்கப்படுகிறது. இது இம்மாதம் 16-25 வரை தென்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பூமி வாழ் மக்களுக்கு இது மிகவும் சமீபித்த காட்சியாக தோன்றும்.

இந்நிகழ்வானது வழமையாக 20 ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கின்ற போதிலும் இம்முறை 800 ஆண்டுகளின் பின்பே இவ்வாறானதொரு சமீபித்த காட்சி தோன்றுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

1226ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதியே இவ்வாறு சமீபமான ஒரு காட்சி தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது