“திருமண ஆண்டு விழா” யாழில் இடம்பெற்ற துயரம்!

“திருமண ஆண்டு விழா” யாழில் இடம்பெற்ற துயரம்!

தென்மராட்சி - நுணாவில் பகுதியில் இடம்பெற்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

உயிரிழந்த இருவர் தொடர்பில் இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது “நான் திருமணம் முடித்து 10 மாதங்கள். எனது மனைவியின் சகோதரருக்கு இன்று திருமண ஆண்டு விழா. அதனால் அவரது வீட்டில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்க சரசாலைக்கு காரில் சென்றோம்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் நிலை தடுமாறி அதனைசெ் செலுத்திச் சென்றார்.

அவரை முந்துவதற்கு முயன்ற போதே கார் வேகக் கட்டுப்பாட்டையிழந்து எரிபொருள் தாங்கியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது” என்று சாரதியான உயிரிழந்த பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கினார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று திடீர் இறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.