நுணாவிலில் விபத்து: 4 வயது சிறுவன் உட்பட இருவர் மரணம்!

நுணாவிலில் விபத்து: 4 வயது சிறுவன் உட்பட இருவர் மரணம்!

யாழ். நுணாவில் ஏ-9 வீதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர்.

அவர்களில் நான்கு வயது சிறுவன், 35 வயது பெண் ஆகியோரே உயிரிழந்தனர்.

ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.