பலாலியில் தனிமைப்படுத்தல் நிறைவு: 89 பேர் வீடு திரும்பினர்

பலாலியில் தனிமைப்படுத்தல் நிறைவு: 89 பேர் வீடு திரும்பினர்

பலாலியிலுள்ள இலங்கை விமானப்படைத் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவித்துள்ளது.

இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய நிலையில் இவர்கள் அனைவரும் பலாலியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.