
யாழில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கி உள்ளது.
சடலம் நேற்று கடற்கரை பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்து காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்