இன்றைய ராசி பலன்கள் 09/12/2020
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை தற்போது சந்திக்க வேண்டியிருக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரியோர்கள் இடமிருந்நு நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
தனுசு
தனுசு: பிரச்சினையின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.