உலகின் மிக உயரமான மலையான எவரஸ்ட் சிகரம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
உலகின் மிக உயரமான மலைத் தொடரான எவரஸ்ட் மலைத் தொடரின் உயரம் அதிகரித்துள்ளது.
குறித்த உயரம், 0.86 சென்றீ மீற்றரினால் உயர்வடைந்துள்ளதாக நேபாளம் மற்றும் சீனா ஆகிய அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.
சீனா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் நிலஅளவை திணைக்களத்தினால் இன்று இந்த கூட்டு அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
1954ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அளவை நடவடிக்கையின் ஊடாக, எவரஸ்ட் மலைத் தொடரின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8848 மீற்றர் என கணிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், புதிதாக நடத்தப்பட்ட அளவீட்டு நடவடிக்கைகளின் ஊடாக குறித்த மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8848.86 மீற்றர் (29,038 அடி) என அளவிடப்பட்டுள்ளது.