காவற்றுறை ஊடகப் பிாிவில் பதவி மாற்றம்
காவற்றுறை மக்கள் தொடர்பாடல் பிாிவு மற்றும் காவற்றுறை ஊடகப் பிாிவில் பதில் பணிப்பாளராக காவற்றுறை உத்தியோகத்தர் புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
காவற்றுறை மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு இன்று (08) காவற்றுறை பிாிவில் அவரது பதவியை ஏற்றுக் கொண்டதாக அப்பிாிவு அறிக்கையொன்றின் மூலம் தொிவித்துள்ளது
எவ்வாறெனினும் பிரதிக் காவற்றுறை மா அதிபர் அஜித் ரோஹன தொடர்ந்தும் காவற்றுறை ஊடகப் பேச்சாளர் பதவியில் கடமையாற்றுவாரென காவற்றுறை தலைமையகம் தொிவிக்கின்றது.