யாழில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்தான முதலை

யாழில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்தான முதலை

சாவகச்சேரி - மகிழங்கேணி கிராமத்திற்குள் நேற்று காலை ஆறடி நீளமான முதலை ஒன்று புகுந்ததனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

சாவகச்சேரி கச்சாய் கடல் நீரேரி பகுதியில் இருந்து வாய்க்கால் ஊடாக இம் முதலை குடிமனைக்குள் புகுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு குடிமனைக்குள் புகுந்த முதலையை யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

சாவகச்சேரி மகிழங்கேணிக் கிராமம் வெள்ள அனர்த்தம் காரணமாக கச்சாய் கடல் நீரேரியுடன் இணைந்து காணப்படுகின்றது.

இதேவேளை யாழில் அண்மை நாட்களாக பெய்த மழையால் சில இடங்களில் நீர்தேங்கி நிற்கின்றது.

இதனால் முதலை பாம்பு போன்ற ஆபத்தான விலங்குகள் குடியிருப்புக்குள் வரும் என்ற அச்சத்துடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.