இந்தியாவில் புதிய நோய் கண்டுபிடிப்பு - 300 பேர் வைத்தியசாலைகளில்..!

இந்தியாவில் புதிய நோய் கண்டுபிடிப்பு - 300 பேர் வைத்தியசாலைகளில்..!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இனங்காணப்படாத நோய் காரணமாக 300 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாகவும் ஆந்திர மாநில மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயக்கம் மற்றும் குமட்டல் ஆகியன இந்த நோயின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன

இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதோடு, ஏனையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது எவருக்கும் கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பருகிய தண்ணீரின் மாதிரிகள் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.