அமெரிக்க தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!

அமெரிக்க தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் அதிகாலை 5 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பற்றி எரிந்த தீயினால் தேவாலய கட்டிடம் முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.