ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கொழும்பு கிங்ஸ்
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது லீக் போட்டியாக ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியுடனான போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது
நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்ளை வெற்றி இலக்கை அடைந்தது.
கொழும்பு கிங்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த தினேஸ் சந்திமல் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்
இந்த வெற்றியின் மூலம் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு கொழும்பு கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி சார்பில் லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் தனது முதல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகமானார்.
அவர், 4 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தியிருந்தார்.
அவருக்கு முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.