இன்றைய ராசி பலன்கள் 05/12/2020
மேஷம்
சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துகளால் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
மிதுனம்
புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
கடகம்
சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
சுபவிரயங்கள் ஏற்படும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய ஆதாயம் கிடைக்கும். செய்யும் தொழிலில் சிறு மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
கன்னி
எண்ணங்கள் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொல்லாதவர்கள் விலகுவர். பணம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும்.
விருச்சகம்
இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு வாங்கும் வாய்ப்பை வெற்றிகரமாக நிறை வேற்றிக் கொள்வீர்கள்.
தனுசு
காரியங்களில் வெற்றி பெற கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. புதியவர்களிடம் பழகும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை.
மகரம்
கனவுகள் நனவாகும் நாள். உறவினர் வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். திருமண முயற்சி கைகூடும். பணியாளர்களுடன் இருந்த பகை விலகும். உத்யோகமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். வீடுமாற்றம் உறுதியாகலாம்.
மீனம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். நீண்ட தூரத்திலிருந்து நல்ல தகவல் வரலாம்.