நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவன்! தேடும் பணிகள் தீவிரம்

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவன்! தேடும் பணிகள் தீவிரம்

வவுனியாவில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.

தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ள

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியாவில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் துருசு வழியாக வெளியேறி வருகின்றது.

இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இன்றையதினம் மதியம் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. பின் பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகளால் இளைஞரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  • IMG 789112f4d0ca9d51b2e64684b8e66efc V

  • IMG a502947d075ac9ad93190b127db86c6d V

  • IMG 1b63c16b93734d810f855af7a08d2da0 V

  • IMG 058e57780b03700b9bb087f819ee0148 V