உயிரிழந்த யானையின் குட்டியை கைகளில் எடுத்தபோது நிலைகுலைந்துவிட்டேன்! கண்கலங்கும் மருத்துவர்- வெளியான புதிய தகவல்

உயிரிழந்த யானையின் குட்டியை கைகளில் எடுத்தபோது நிலைகுலைந்துவிட்டேன்! கண்கலங்கும் மருத்துவர்- வெளியான புதிய தகவல்

கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் தற்போது பிறிதொரு தகவல் வெளியாகி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்த கர்ப்பிணி யானை ஒன்று ஊருக்குள் சென்ற நிலையில் அந்த யானை உயிரிழந்திருந்தது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அப்பகுதியினைச் சேர்ந்த சிலர் யானைக்கு கொடுத்த அண்ணாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததாகவும், அதனால்தான் யானை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்று, இந்திய வனத்துறை அதிகாரி ஏபி க்யூமை பேட்டி எடுத்தது. அத் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பேசிய அவர்,

யானைக்கு யாரும் வெடிமருந்து நிரம்பிய அண்ணாசி பழங்களை கொடுக்கவில்லை என நினைக்கிறேன். காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட அண்ணாசிப் பழங்களை பசிக்காக யானை உண்டதாகத் தெரிகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களையும், தங்களது பயிர்களையும் பாதுகாக்க இது போன்ற விஷயங்களை செய்கின்றனர்.

விவசாயிகள் தங்களது பயிர்களை காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வலைகளை வைத்துள்ளனர். இந்த வலையில் காட்டுப்பன்றிகள் மட்டுமல்லாது பிற விலங்குகளும் சிக்கிவிடுகின்றன.

இறந்த கர்ப்பிணி பெண் யானை பாலக்காட்டில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவில் இருந்து வந்துள்ளது. யானைக்கு தற்போது 15 வயது. உண்மையில், யானை இறந்தது அனைவருக்கும் பெரும் வலியைக் கொடுத்து விட்டது என்றார். இதேவேளை, யானையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டேவிட் பேசியதாவது,

நான் 250-க்கும் மேற்பட்ட யானைகளுக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் முதல் முறையாக ஒரு இறந்த கர்ப்பிணி யானையின் குட்டியை கைகளில் எடுத்த போது நான் நிலைகுலைந்து விட்டேன்.

முதலில் யாரும் யானை கர்ப்பிணியாக இருப்பதை அறியவில்லை. யானையின் இதயத்திலிருந்து அம்னோடிக் திரவம் வந்த போதுதான் யானை கர்ப்பிணியாக இருக்கிறது என்பதை அறிந்தோம் என்றார்.