புரெவிப் புயலால் யாழ். மாவட்டத்தில் 51,602 பேர் பாதிப்பு!

புரெவிப் புயலால் யாழ். மாவட்டத்தில் 51,602 பேர் பாதிப்பு!

புரெவிப் புயலால் யாழ். மாவட்டத்தில் தற்போது வரை 15 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

;யாழ்.மாவட்டத்தில் இதுவரை இருவர் உயிரிழந்த அதேவேளை 6 பேர காயமடைந்தனர்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 976 குடும்பங்களைச் சேர்ந்த 3540 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 53 வீடுகள் முழுமையாகவும், 2008 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிகளில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்- என்றார்.