தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய சுருதிஹாசன்.... எதற்காக தெரியுமா?

தயாரிப்பாளரின் லுங்கியை திருடியதாக நடிகையும், பாடகியுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். 

 

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். 

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் பிகினி உடை மீது லுங்கி அணிந்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.  

 

அந்தப் பதிவில், உங்கள் லுங்கியைத் திருடியதற்கு மன்னியுங்கள் என  தயாரிப்பாளர் ரேயன் ஸ்டெபனை குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரேயன், நீயே வச்சிக்கோ சுருதிமா என பதிவிட்டுள்ளார்.