கொடிகாமத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் வலிப்பு ஏற்பட்டதால் மரணம்!- அரச அதிபர்
கொடிகாமம் பகுதியில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு யாரும் கவனிக்காத நிலையில் வீதி வெள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்றபோது வீதியில் மயக்கமடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்தவரை மீட்டு மிருசுவில் நாவலடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகேஷ் (வயது – 28) என்வரே இவ்வாறு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.