மாத்தளை மாநகர சபையின் முதல்வர் டல்ஜித் அலுவிஹார பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..!

மாத்தளை மாநகர சபையின் முதல்வர் டல்ஜித் அலுவிஹார பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..!

மூன்று மாதங்கள் பணித்தடை விதிக்கப்பட்டிருந்த மாத்தளை மாநகர சபையின் முதல்வர் டல்ஜித் அலுவிஹார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையில் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாநகர சபையின் உப முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைய ஒருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை கடந்த 24 ஆம் திகதி ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய நகர முதல்வர் டல்ஜித் அலுவிஹார மாநகர சபை கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகள் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதற்கமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.