
புரெவி சூறாவளியின் தாக்கம் இதோ...! அதிக மழைவீழ்ச்சி கிளிநொச்சியில்...!
புரெவி சூறாவளியினால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே மழைவீழ்ச்சியின் அளவு அதிகமாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய கிளிநொச்சி - அக்ராயன் குளத்தில் 279.8 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரி பகுதியில் 260 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் முல்லைத்தீவு பகுதியில் 224 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புரெவி சூறாவளியினால் வட மாகாணத்தின் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட போக்குவரத்து தடையை சீர் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.