கிளிநொச்சி மாவட்டத்தின் வயல் நிலங்களை நாசமாக்கிய கனமழை

கிளிநொச்சி மாவட்டத்தின் வயல் நிலங்களை நாசமாக்கிய கனமழை

நிலவும் அசாதாரண காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் வயல் நிலங்களும் மீனவர்கள் மீன்பிடி படகுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு கிளிநொச்சி பூநகரி பகுதியிலுள்ள பள்ளிக்குடா, வலைப்பாடு பகுதியை அண்டியுள்ள கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கடலை அண்டிய கிராமங்களுக்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது.

இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கரையோரங்களில் மீனவர்கள் மீன்பிடி படகுகள் நிறுத்திவைக்கப்பட்டபோது அவற்றுக்குள் கடல் நீர் புகுந்ததை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பூநகரி குடமுருட்டி குளத்தி வான்கதவு திறக்கப்பட்டன.

இதனால் குறித்த பகுதிகளை அண்மித்த இடங்களில் உள்ள நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்படைந்து இருக்கின்றன.