
சிறைச்சாலையில் இடம்பெற்ற பெரும் களேபரம்!
புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இன்று மகர சிறைச்சாலைக்கு நேரில் சென்றிருந்தார்.
மகர சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், 11 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் கைதிகளால் எரியூட்டி சேதமடைந்த சிறைச்சாலையின் அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் மகர சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.
சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகள் மீதும் உடனடியாக பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் குறித்த கலவரத்தில் சேதமாக்கப்பட்ட புகைப்படங்கள் முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.