இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக சமூகத்தினிடையே பரவும் அபாயம்!
சுகாதார அமைச்சின் கவனயீனமான செயற்பாட்டினால் இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக சமூகத்தினிடையே பரவும் அபாயம் உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித்த அலுக்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் மேலும் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று படர்ந்துள்ளது. மேல் மாகாணத்தை தவிர்த்து இரத்தினபுரி மாவட்டத்திலும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்துவிட்டதாக சொல்லமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.