இன்றைய ராசி பலன்கள்02/12/2020

இன்றைய ராசி பலன்கள்02/12/2020

மேஷம்

மேஷம்: உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.


மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலைநினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் புதிய  பொறுப்பினை ஏற்பீர்கள். இனிமையான நாள்.


கன்னி

கன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.


துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் புதிய பாதை தெரியும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்:  சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


தனுசு

தனுசு: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.


கும்பம்

கும்பம்:  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


மீனம்

மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.