நாளை வெளியாகிறது விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ: அதிரடி அறிவிப்பு

நாளை வெளியாகிறது விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ: அதிரடி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருவது தெரிந்ததே. ஜூன் 22ஆம் தேதி மட்டுமின்றி ஜூன் மாதம் முழுவதுமே விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆகத்தான் இருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியாத வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக விஜய் பிறந்தநாளை ஒட்டி போஸ்டர்கள் கூட ஒட்ட முடியாத நிலையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் இந்த நான்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் விதவிதமான அடுக்குமொழி அடைமொழியுடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி ’மாஸ்டர்’ பட குழுவினர் ஏதேனும் அப்டேட் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளை ஒரு சிறப்பு வீடியோ வெளியாக இருப்பதாகவும் ’Let Me Tell You A Kutty Story’ என்ற தலைப்பில் வெளியாகும் இந்த வீடியோவில் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ் தோன்ற இருப்பதாகவும் இந்த வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு நாளை வெளியாகும் இந்த வீடியோ அவருடைய பிறந்த நாள் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.