நாளை நள்ளிரவு வெளிவருகிறது முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

நாளை நள்ளிரவு வெளிவருகிறது முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

சுகாதார வழிமுறைகளுடன் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கமைய முன்னெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார அமைச்சின் உறுப்பினர் ஒருவரை வாக்குச்சாவடிகளில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் காணப்படும் நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு ஆரம்பத்திலேயே வருகை தருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க இறுதி மணித்தியாலங்களில் சந்தர்ப்பம் காணப்படுகிறது.

காய்ச்சல் உள்ளிட்ட அவதான நிலைக்குரிய உடல் உபாதைகளுக்கு உள்ளானோர், ஏனையோருடன் தொடர்பிலிருப்பதை தடுப்பதற்கெனவே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.