அச்சிடப்பட்டுள்ள 11 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள்...!
11 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் அது தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வாக்குசீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக அந்தந்த தேர்தல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரையில் 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது வாக்களிப்பதற்கான காலத்தினை நீடிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் பிரசார கூட்டங்களின் போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றபடுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான பொறுப்பு தமக்கானது அல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.