நியுயோர்க் மாநிலத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
அமெரிக்காவின் நியுயோர்க் மாநிலத்தில் மீண்டும் அடுத்தவாரம் முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனினும் மாணவர்களுக்கு வாராந்தம் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அங்கு பாடசாலைகள் மூடப்பட்டன.
இதேவேளை அமெரிக்காவில் இதுவரையில் ஒருகோடியே 37 இலட்சத்து 51,337 பேர் கொவிட் 19 நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 729 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரையில் அங்கு 2 இலட்சத்து 73,101 பேர் கொவிட்19 தொற்றினால் மரணித்தனர்.