புத்தசாசன மற்றும் கலாச்சார விவகாரங்களுக்காக சர்வமத இணைப்பாளர்கள் நியமிப்பு
புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புத்தசாசன மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளராக வன.கௌரவ கலாநிதி அங்ரஹாரே கஷ்ஸப நாயக்க தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்து மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளராக கௌரவ கலாநிதி சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளராக அஸ்-ஸெய்யத் அஷ்-ஷெய்க்ஹ் கௌரவ கலாநிதி ஹஸன் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்துவ மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளராக அருட்தந்தை கௌரவ கலாநிதி சிக்ஸ்டன் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.